வடக்குத் தேர்தலை 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே நடத்த வேண்டும் : யாழ். ஆயர் வலியுறுத்தல்
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 13ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இச் சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் வடமாகாணத் தேர்தலை நடத்தவேண்டும். தேர்தலை நடத்துகின்றபோது ஜனநாயக அதிகாரங்களை தமிழ் மக்களும் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தேர்தலை நடத்தத் திட்டமிடுவது பிழையான முடிவாகும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசிய அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மனிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசியாவிற்கான அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மன் உள்ளிட்ட இரண்டு பேர் நேற்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் வடமாகாணத் தேர்தல் தொடர்பாகவும் வினாவியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கில் 6ஆயிரத்து 183 ஏக்கர் காணிகளை இராணுவ தேவைகளுக்காக அரசாங்கம் சவீகரித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கில் இன்னமும் முழுமையாக மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இம் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசாங்கத்தினால் இவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு மட்டும் சென்றுள்ளனர். அவர்களுக்கும் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் இன்னமும் முழுமையாகச் செய்து கொடுக்கவில்லை.
யாழ். குடா நாட்டின் கரையோரப் பகுதியில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அபாயகரமான கடற்பயணங்களை மேற்கொண்டு புலம்பெயர்ந்து செல்கின்றனர். வடக்கில் வசிக்கின்ற மக்களுக்கு தற்பொழுது வேலை வாய்ப்புக்கள் கிடைக்காமையினால் குறைந்தளவான வருமானங்களையே பெற்றுக்கொள்கின்றர். குறிப்பாக கடற்றொழிலாளர்களின் வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளது.
இந்தியன் றோலர் படகுகள் அத்துமீறி வடகடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதால் இம் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. வடக்கில் வசிக்கின்ற இளைஞர்கள் தற்பொழுதும் பயப்பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். இம் மக்களுக்கு இன்னமும் அரசாங்கம் சரியானதொரு அரசியல் தீர்வினை வழங்கவில்லை. இதனால் எமது இளைஞர்கள் கடல்தாண்டி தமது உயிரையும் பொருட்படுத்தாது அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது அவர்களுடைய உயிருக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் எமக்கும் விசனத்தை ஏற்படுத்துகின்றது என அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு இன்றும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதோடு இராணுவக் குறைப்பும் இன்னமும் வடபகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளவில்லை. மூன்றில் ஒரு பகுதி இராணுவம் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் உள்ளது என அரசாங்கம் கூறினாலும் அதிகமான இராணுவத்தினை யாழ்ப்பாணத்தில் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதனை நாம் நன்கு அறிவோம் என அவுஸ்திரேலியாவின் தொற்காசியாவிற்கான அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மன் எம்மிடம் தெரிவித்ததோடு வடமாகாணத் தேர்தல் தொடர்பாகவும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் வடபகுதியின் சமகால அரசியல் கள நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக கேட்டறிந்துகொண்டனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த அவுஸ்திரேலிய அதிகாரிகள்,
வட பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து அவுஸ்ரேலிய நாட்டிற்கு அகதிகளாக வருவதை நாம் அனுதாப ரீதியாகப் பார்க்கிறோம். தரகர்களின் பேச்சை நம்பி உயிரைப் பயணம் வைத்து நடுக்கடலிலே சிலர் உயிரை இழக்கின்றனர். இது எமக்கு வோதனை அளிக்கிறது. படகில் அவுஸ்திரேலியாவிற்கு வருகின்ற அகதிகளை வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு வருவதற்கான காரணம் உண்மையென இனங்கண்டால் மட்டுமே அவர்களை எமது நாட்டிற்குள் அனுமதிக்கின்றோம். பொய்யான காரணத்தை எம்மிடம் தெரிவிக்கும் அகதிகளை நாம் திருப்பி அனுப்பி விட்டோம் என்றார்.
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 13ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இச் சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் வடமாகாணத் தேர்தலை நடத்தவேண்டும். தேர்தலை நடத்துகின்றபோது ஜனநாயக அதிகாரங்களை தமிழ் மக்களும் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தேர்தலை நடத்தத் திட்டமிடுவது பிழையான முடிவாகும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசிய அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மனிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசியாவிற்கான அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மன் உள்ளிட்ட இரண்டு பேர் நேற்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் வடமாகாணத் தேர்தல் தொடர்பாகவும் வினாவியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கில் 6ஆயிரத்து 183 ஏக்கர் காணிகளை இராணுவ தேவைகளுக்காக அரசாங்கம் சவீகரித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கில் இன்னமும் முழுமையாக மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இம் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசாங்கத்தினால் இவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு மட்டும் சென்றுள்ளனர். அவர்களுக்கும் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் இன்னமும் முழுமையாகச் செய்து கொடுக்கவில்லை.
யாழ். குடா நாட்டின் கரையோரப் பகுதியில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அபாயகரமான கடற்பயணங்களை மேற்கொண்டு புலம்பெயர்ந்து செல்கின்றனர். வடக்கில் வசிக்கின்ற மக்களுக்கு தற்பொழுது வேலை வாய்ப்புக்கள் கிடைக்காமையினால் குறைந்தளவான வருமானங்களையே பெற்றுக்கொள்கின்றர். குறிப்பாக கடற்றொழிலாளர்களின் வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளது.
இந்தியன் றோலர் படகுகள் அத்துமீறி வடகடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதால் இம் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. வடக்கில் வசிக்கின்ற இளைஞர்கள் தற்பொழுதும் பயப்பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். இம் மக்களுக்கு இன்னமும் அரசாங்கம் சரியானதொரு அரசியல் தீர்வினை வழங்கவில்லை. இதனால் எமது இளைஞர்கள் கடல்தாண்டி தமது உயிரையும் பொருட்படுத்தாது அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது அவர்களுடைய உயிருக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் எமக்கும் விசனத்தை ஏற்படுத்துகின்றது என அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு இன்றும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதோடு இராணுவக் குறைப்பும் இன்னமும் வடபகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளவில்லை. மூன்றில் ஒரு பகுதி இராணுவம் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் உள்ளது என அரசாங்கம் கூறினாலும் அதிகமான இராணுவத்தினை யாழ்ப்பாணத்தில் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதனை நாம் நன்கு அறிவோம் என அவுஸ்திரேலியாவின் தொற்காசியாவிற்கான அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மன் எம்மிடம் தெரிவித்ததோடு வடமாகாணத் தேர்தல் தொடர்பாகவும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் வடபகுதியின் சமகால அரசியல் கள நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக கேட்டறிந்துகொண்டனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த அவுஸ்திரேலிய அதிகாரிகள்,
வட பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து அவுஸ்ரேலிய நாட்டிற்கு அகதிகளாக வருவதை நாம் அனுதாப ரீதியாகப் பார்க்கிறோம். தரகர்களின் பேச்சை நம்பி உயிரைப் பயணம் வைத்து நடுக்கடலிலே சிலர் உயிரை இழக்கின்றனர். இது எமக்கு வோதனை அளிக்கிறது. படகில் அவுஸ்திரேலியாவிற்கு வருகின்ற அகதிகளை வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு வருவதற்கான காரணம் உண்மையென இனங்கண்டால் மட்டுமே அவர்களை எமது நாட்டிற்குள் அனுமதிக்கின்றோம். பொய்யான காரணத்தை எம்மிடம் தெரிவிக்கும் அகதிகளை நாம் திருப்பி அனுப்பி விட்டோம் என்றார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply