சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதலில் 60 ஷியா பிரிவு கிராமவாசிகள் உயிரிழந்தனர்.சிரியாவின் கிழக்குப்பகுதி டேர் எஸ்ஸர் மாகாணத்தில் உள்ள ஹட்லா கிராமத்தைச் சேர்ந்த ஷியா பிரிவினர் திங்கள்கிழமை கிளர்ச்சியாளர்களின் சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக, கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 60 பேரைக் கொன்றனர். இத்தகவலை மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.

முன்னதாக திங்கள்கிழமை நிகழ்ந்த மோதலில் 10 கிளர்ச்சியாளர்களும் இறந்தனர். இந்த மோதல்களைத் தொடர்ந்து ஹட்லா கிராமவாசிகள் அங்கிருந்து தப்பியோடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுக் கலகத்தை எதிர்கொண்டு வரும் அதிபர் பஷார் அல் அசாதின் அரசு இப்போது நாட்டின் சில பகுதிகளில் உள்ளூர் போர்க் குழுக்களை உருவாக்கி அவற்றுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து கிளர்ச்சியாளர்களுடன் மோதும்படி கேட்டுக் கொண்டு வருகிறது. ஹட்லா கிராமத்தில் இவ்வாறு அரசிடம் பயிற்சி பெற்றவர்களே கிளர்ச்சியாளர்களுடன் மோதினர். அரசுத் தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலானது ஷியா-சன்னி பிரிவு மோதலாக உருமாறியுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதலில் 60 ஷியா பிரிவு கிராமவாசிகள் உயிரிழந்தனர்.

சிரியாவின் கிழக்குப்பகுதி டேர் எஸ்ஸர் மாகாணத்தில் உள்ள ஹட்லா கிராமத்தைச் சேர்ந்த ஷியா பிரிவினர் திங்கள்கிழமை கிளர்ச்சியாளர்களின் சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக, கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 60 பேரைக் கொன்றனர். இத்தகவலை மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.

முன்னதாக திங்கள்கிழமை நிகழ்ந்த மோதலில் 10 கிளர்ச்சியாளர்களும் இறந்தனர். இந்த மோதல்களைத் தொடர்ந்து ஹட்லா கிராமவாசிகள் அங்கிருந்து தப்பியோடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுக் கலகத்தை எதிர்கொண்டு வரும் அதிபர் பஷார் அல் அசாதின் அரசு இப்போது நாட்டின் சில பகுதிகளில் உள்ளூர் போர்க் குழுக்களை உருவாக்கி அவற்றுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து கிளர்ச்சியாளர்களுடன் மோதும்படி கேட்டுக் கொண்டு வருகிறது. ஹட்லா கிராமத்தில் இவ்வாறு அரசிடம் பயிற்சி பெற்றவர்களே கிளர்ச்சியாளர்களுடன் மோதினர். அரசுத் தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலானது ஷியா-சன்னி பிரிவு மோதலாக உருமாறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply