தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது : கோதபாய

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டு சக்திகள் இலங்கை விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு கிழக்கில் இயங்கிய சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தை தடுத்து நிறுத்த சில ஐரோப்பிய நாடுகள் பல தடவைகள் முயற்சி மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படாவிட்டால் மட்டுமே பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழு இராச்சியம், க்ளோபல் தமிழ் போரம், தமிழர் இணைப்புச் செயலகம் என பல்வேறு ஜனநாயக வழி அமைப்புக்கள் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் சகல இன சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply