பாகிஸ்தானில் பஸ்சில் குண்டை வெடித்தது பெண் தீவிரவாதி

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் பல்கலைக்கழக பஸ் மற்றும் மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் லஷ்கர்௲இ௲ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பினர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் 14 மாணவிகள், 4 நர்சுகள் உள்பட 20௲க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது. இதன் சாவு எண்ணிக்கை நேற்று 25 ஆக அதிகரித்தது. மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.இந்த தாக்குதல் நடந்தது எப்படி? என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. பல்கலைக்கழகம் வகுப்பு முடிந்ததும் 40 மாணவிகளும், ஆசிரியர்களும் பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டார்கள். அதில் பெண்களை தவிர வேறு யாரும் பயணம் செய்ய முடியாது. ஆதலால் பெண் தீவிரவாதியே வெடிகுண்டுகளை அணிந்து வந்து தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 14 பேர் பலியானதுடன், 22 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையிலும் 4 தீவிரவாதிகள் புகுந்து குண்டை வெடித்தனர். அதில் 4 நர்சுகள் உள்பட பலர் இறந்தனர். அங்கு தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 35 பேரை போலீசார் விடுவித்தனர். ஒரு தீவிரவாதியும் உயிருடன் பிடிபட்டான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply