தென்கொரியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி

தென்கொரியத் தலைநகர் சியோலில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த நாட்டு தீயணைப்புத்துறை அதிகாரி சா யாங் ஹோ தெரிவித்துள்ளதாவது. தென்கிழக்கு சியோல், கங்னம் மாவட்டத்திலுள்ள மின்சாதன பொருள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களை, வேலைக்காக அந்நாட்டின் மற்றொரு நகரத்துக்கு அழைத்து வர ஹெலிகாப்டர் செல்வது வழக்கம். அதேபோல் சனிக்கிழமை அவர்களை வேலைக்கு ஏற்றிச்செல்ல ஹெலிகாப்டர் சென்றது.அப்போது ஹெலிகாப்டரை சியோலில் தரை இறக்கும்போது அருகிலுள்ள 38 மாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலைமை விமானி பார்க் இன் க்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சியோல் நகரில் உள்ள விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு இது என்று சா யாங் ஹோ தெரிவித்தார்.

விபத்து குறித்து அடுக்குமாடிக் குடியிருப்புவாசி ஒருவர் தெரிவிக்கையில், நான் தூங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. மீண்டும் போர் தொடங்கிவிட்டது என நினைத்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply