பொதுநலவாய அரச தலைவர்களுக்கு மனித உரிமையின் அர்த்தத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச நாடுகளுக்கு சவாலான வகையில் பொதுநலவாய நாடுகள் உச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட்டு இலங்கைக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இந்தப் பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.53 சர்வதேச நாட்டுத் தலைவர்களுக்கு மனித உரிமையின் பொருளைத் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘எனது நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய உரிமையையும் சூழலையும் பெற்றுக்கொடுத்தமையே மனித உரிமை’ என்பதைச் சுட்டிக்காட்டி யுள்ளார் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
‘நமக்காக நாம்’ படையினருக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முப்படைக ளையும் சேர்ந்த 112 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஹோமாகம பிடிபனவில் நடைபெற்றது. அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் சிறப்பு ரையாற்றிய போதே ஜனாதிபதியின் செய லாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :-
இந்த நாட்டை அழித்து நாட்டைப் பிளவுபடுத்த கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தம் செய்த பயங்கரவாதிகள் 12,000 பேர் ஆயுதங்களுடன் சரணடைந்த போது, அவர்களுக்கு விடுதலையளித்து புனர்வாழ்வளித்ததுடன், சமூகத்தில் இணையச் செய்தது மனித உரிமையாகும். அதனை ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டார். பொதுநலவாய நாடுகளின் தலைமை த்துவத்தை பொறுப்பேற்று இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட 53 பொதுநலவாய நாடுகளில் அனைத்து நாடுகளுக்கும் சமமான அபிவிருத்தி இடம்பெற வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு மனித உரிமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்து பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பொறுப்பேற்று நடத்த சில நாடுகள் பின்வாங்கும் நிலையில் உலகத் தலைவர்கள் பிரமிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள் பிரமாண்டமாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தியுள்ளார். இந்தளவு பிரமாண்டமாக தம்மால் நடத்த முடியுமோ என்ற வியப்பிலேயே சில நாடுகள் அடுத்த மாநாட்டைப் பொறுப்பேற்கவும் தயங்கின. எனவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply