இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சீனா கோரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளில் பல்வேறு பட்ட நாடுகளில் வித்தியாசங்கள் காணப்படுவதால் மனித உரிமைகள் பாதுகாப்பிலும் வித்தியாசங்கள் இருக்கலாம் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிங் கேங் தெரிவித்துள்ளார்.பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றிலேயே சீனாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனித உரிமையை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கைகள் எடுப்பதே முக்கியமாகும். உலகின் ஏனைய நாடுகள் அவற்றுக்கு பயன்மிக்க உதவிகளை மட்டுமே வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் கேள்வி எழுப்பப்பட்டமை மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் கூற்று ஆகியவை தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்தியாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இது பொதுநலவாய அமைப்புக்குரிய விடய மாகும். எனினும், மனித உரிமை விவகாரத்தில் நாடுகளுக் கிடையிலான கலந்துரையாடல்களும் தொடர்புகளும் அதிகரிக்கப்படவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இவ்வரு டத்திற்கான உறுப்புரிமையை சீனா பெற்றுள்ள நிலையில் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply