வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் நலன் கருத்திற்கொள்ளப்படவில்லை : TNA

வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் நலன் கருத்திற் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். எனினும், இந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.சாதாரண பொதுமக்கள் பற்றிய எந்தவொரு விடயமும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலேயே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், இந்தப் பரிந்துரைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை என அவர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply