எரிமலை வெடிப்பினால் ஜப்பானில் புதிய தீவு
ஜப்பானிய தலைநகர் டோக்கியோவின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால், அப்பகுதியில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது. இதுபற்றி கடலோர காவல் படை மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:- எரிமலை வெடிப்பால் ஏற்பட்டுள்ள இந்த புதிய தீவு 200 மீட்டர் வீட்டம் கொண்டுள்ளது. தெற்கு டோக்கியோவில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் ஏறத்தாள 30 தீவுகள் இருக்கும் அதன் அருகே மேலும் ஒரு தீவு உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 1970ம் ஆண்டுகளிலும் ஜப்பானில் இவ்வாறான தீவு ஒன்று உருவாகியதாக கூறப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply