ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்படாக அமையாது : சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமி;ழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.தேசிய இனப்பிரச்சினைக்கான கட்சியின் தீர்வுத் திட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீதரன் உணர்வுபூர்மாக கருத்து வெளியிட்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத் தேர்தல்களின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஓர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும் இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் அண்மையில் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply