மாஸ்கோவில் 15 தற்கொலைப்படை தீவிரவாதிகள் கைது

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 15 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா துணை அமைப்பான தக்ஃபீர் வால்-ஹிஜ்ரா என்ற அமைப்பைச் சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர்.இதையறிந்த மாஸ்கோ போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இணைக்கப்பட்ட பெல்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply