மீளவும் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு

பிரித்­தா­னியா இலங்­கையை ஆக்­கி­ர­மித்த வேளை பல்­வேறு அட்­டூ­ழி­யங்­களை செய்த நிலையில் தற்­போது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய அம்­சங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மீளவும் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க பிரித்­தா­னியா திட்­ட­மிட்­டுள்­ளது என தேசிய சுதந்­திர முன்­னணி குற்றம் சாட்­டி­யுள்­ளது.அன்று மொன­ர­வில கெப்­பட்டிப்பொல முகங்­கொ­டுத்­ததை விட பல்­வேறு சவால்­க­ளுக்கு தற்­பொ­ழுது நமது தேசம் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இச் சாவால்­களை முறி­ய­டிக்க மொன­ர­வில கெப்­பட்டிப்­பொல கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது எனவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

செள­சி­றி­பா­யவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அக்­கட்சி அர­சியல் குழு உறுப்­பினர் சேனா­ரட்ன த சில்வா இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

பிரித்­தா­னி­யா­வி­ட­மி­ருந்து இந்நாட்­டைக்­காக்க புரட்­சி­க­ர­மாக செயற்­பட்ட மொன­ர­விலஇ கெப்பட்­டிப்பொல தேசத்­திற்­காக பல்­வேறு தியா­கங்கள் செய்­துள்ள நிலையில் அவர் உன்­ன­த­மான வீர­பு­ரு­ஷ­ரா­வார். மொன­ர­வில கெப்பட்­டிப்­பொல தொடர்­பாக ஆய்­வொன்றை மேற்­கொண்ட இங்­கி­லாந்தின் சத்­திர சிகிச்சை வைத்­திய நிபு­ண­ரான ஹென்ரி மார்ஷல் கெப்பட்­டிப்­பொ­லவின் தலையை ஆய்வு செய்­வ­தற்­காக இங்­கி­லாந்­திற்கு எடுத்து வந்தார்.
இதன்­போது ஸ்கொட்­லாந்தின் பிர­சித்தி பெற்ற வீர­ரான வில்லியம் வோல்­ஸிற்கு சம­மா­ன­வரே மொன­ர­வில கெப்பட்­டிப்­பொல என்­பதை ஆய்­வி­லி­ருந்து அறிந்­து­கொண்டார்.

கி.பி. 1286ஆம் ஆண்­டிற்கு பின்பு ஸ்கொட்­லாந்தை எட்வட் என்ற மன்னன் ஆக்­கி­ர­மித்­த­வேளை வில்­லியம் வோல்ஸ் என்­ப­வரே அம்­மன்­ன­னுக்கு எதி­ராகப் போரா­டி­னார். அது போலவே 1818ஆம் ஆண்டு இலங்­கையை பிரித்­தா­னியா முழு­மை­யாக கைப்­பற்­றி­ய­வேளை பிரித்­தா­னி­யா­வுடன் இணைந்­தி­ருந்து பின்பு நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக போராட முன்­வந்தார். அப்­போது பிரித்­தா­னியர் அவரை கொடு­மை­யான முறையில் கொலை செய்­தனர்.

அன்று மொன­ர­வில கெப்பட்­டிப்­பொல முகங்­கொ­டுத்­த­தை­விட பல்­வேறு சவால்­க­ளுக்கு தற்­போது நமது நாடு முகங் கொடுத்­துள்­ளது. அன்­றைய காலப்­ப­கு­தியில் சிங்­க­ள­வர்­களை கொடூ­ர­மாகக் கொன்று குவித்த பிரித்­தா­னியர் தற்­போது இலங்கை மனித உரிமை குறித்து பேசு­கின்­றனர். இது தொடர்­பாக இலங்­கைக்கு பல்­வேறு அழுத்­தங்கள் கொடுக்­கின்­றனர்.

இலங்­கை­யினை பிள­வு­ப­டுத்­தவே பிரித்­தா­னியப் பிர­தமர் இவ்­வாறு செயற்­ப­டு­கின்றார்.
அத்­துடன் இலங்­கையின் மீது பல்­வேறு அட்­டூ­ழி­யங்­களை இழைத்த பிரித்­தா­னியா யுத்­தத்­தின்­போது மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றமை மற்றும் ஏனைய சில முக்­கிய அம்­சங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி இலங்­கையை மீளவும் ஆக்­கி­ர­மிக்க டேவிட் கெமரூன் தலை­மை­யாகக் கொண்டு பிரித்­தா­னியா திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கி­றது.

பிரித்­தா­னி­ய­ரி­னால்தான் இலங்கை மலை­யகப் பிர­தே­சங்­களில் புகை­யி­ரதப் பாதைகள் மற்றும் வீதி ஒழுங்­க­மைப்­புகள் அமைக்­கப்­பட்­டன. அதே­வே­ளை கட்­டி­டங்களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன போன்ற விட­யங்­களை முத­லா­ளித்­துவ கொள்­கை­வா­திகள் தெரி­விக்­கின்­றனர். இது மிகவும் வேடிக்­கை­யா­க­வுள்­ளது.

மொன­ர­வில கெப்பட்­டிப்பொல கொள்­கை­களை சிறப்­பான முறையில் நாங்கள் நடைமுறைப்படுத்துவோமாயின் 2014 மார்ச் மாதம் மேலைத்தேய நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட முடியும்.

105 வருடங்களுக்கு பிறகு மொனரவில கெப்பட்டி­ப்பொலவின் சிரார்த்த தினத்தினைக் கொண்டாடும் இவ்வேளை கெப்பட்டி­ப்பொலவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதினூடாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து எங்களால் வெற்றி பெற முடியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply