இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடக் கூடாது : சீனா
இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் உள் விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் நிலைமைகளை மோசமடையச் செய்யும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தின் உரிமைகளுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டுமென கோரியுள்ள சீனா மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மனித உரிமை விவகாரங்களை உலக நாடுகள் அணுக வேண்டுமென சீனா சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இரட்டை
நிலைப்பாட்டுடனோ தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. மனித உரிமை விவகாரத்தை ஓர் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் சீனா தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply