ஈராக்கில் உச்சகட்ட வன்முறை: ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பலி

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் அந்நாட்டில் ஷியா – சன்னி பிரிவினற்கிடையே ஆன மோதல்கள் தலைவிரித்தாடுகின்றன. அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் குண்டுகளை வீசியும் கொல்லும் தீவிரவாத செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று பிரதமர் நூரி அல்-மாலிக்கி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.எனினும், தீவிரவாத தாக்குதல்கள் குறைந்தபாடாக இல்லை. 2013-ல் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஷியா – சன்னி பிரிவினருக்கிடையில் நடந்த மோதல்களில் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் நேற்று வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின.

பழங்குடியின தலைவர்கள், ராணுவ வீரர்கள், போலீசார், பெண்கள் என சுமார் 50 பேரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவர்களை துப்பாக்கிகளால் சுட்டும், வெட்டியும் கொன்று பிணங்களை குப்பை போல் தெருவில் வீசிவிட்டு சென்றனர்.

தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply