இங்கிலாந்தில் மது விடுதி மீது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: இடிபாடுகளில் சிக்கி பலர் காயம்

இங்கிலாந்தில் மது விடுதி மீது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் கிலாஸ்கோ என்ற இடத்தில் ஸ்டாக்வெல் தெருவில் மதுக்கடையுடன் கூடிய விடுதி உள்ளது. இது ஆடம்பர விடுதி என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணயளவில் அங்கு சுமார் 120 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதன் மீது போலீஸ் துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது.

அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் மது விடுதியின் மாடியில் விழுந்தது. இதனால் இடிபோன்ற சத்தத்துடன் அதன் பாகங்கள் நொறுங்கி சிதறின. ஹெலிகாப்டர் விழுந்த வேகத்தில் அந்த மது விடுதி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. எனவே அக்கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் காயத்துடன் சிக்கி தவிர்ப்பவர்களை மீட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் யார்? எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்பன போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஹெலிகாப்டரில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்களின் கதி என்ன என்றும் தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply