நமீபியாவில் மொசாம்பியா விமானம் விழுந்து 33 பேர் பலி
நமீபியாவில் மொசாம்பிய நாட்டு விமானம் விழுந்து நொறுங்கியதில் 33 பேர் பலியாகினர். மொசாம்பியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் தலைநகரில் இருந்து அங்கோலா தலைநகர் லுயாண்டாவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 26 பயணிகள், 7 ஊழியர்கள் இருந்தனர்.ஆனால் குறிப்பட்ட நேரத்தில் அந்த விமானம் அங்கோலா சென்று சேரவில்லை. எனவே அந்த விமானத்தை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று அந்த விமானம் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் எல்லையில் விழுந்து நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விமானத்தின் உடைந்த சில பாகங்கள் மட்டுமே கிடந்தது. பெரும்பாலான பாகங்கள் சாம்பலாகி இருந்தன. எனவே அந்த விமானத்தில் பயணம் செய்த 33 பேரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் 10 பேர் மொசாம்பியர்கள். 9 பேர் அங்கோலாவை சேர்ந்தவர்கள். 5 பேர் போர்ச்சுக்கல்லையும், தலா ஒருவர் பிரான்ஸ், பிரேசில் மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர 6 ஊழியர்கள் ஆவர்.
மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித் தனர். மேலும் இந்த விமான விபத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply