யுத்த கால கணக்கெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது : கமலேஷ் சர்மா
யுத்த கால உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேத விபரங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் என்ன நேர்ந்தது என்பது பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்வதன் மூலமே மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.சிவில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் கணக்கெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைவாக, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான கணக்கெடுப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் புள்ளி விபரத் தரவுகள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply