சிதம்பரம் இலங்கை விவகாரத்தை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார் : அரசாங்கம்
இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், இலங்கை விவகாரத்தை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தரப்பினரை திருப்தி படுத்தும் நோக்கில் அண்மையில் சிதம்பரம் சில கருத்துக்களை சென்னையில் தெரிவித்தள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தலில் தமது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் ஓர் முனைப்பாக சிதம்பரத்தின் கருத்துக்களை நோக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை அரசாங்கம் படுகொலை செய்ததனைப் போன்று, சிதம்பரம் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்தே இவ்வாறு சிதம்பரம், இங்கைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply