மேல், தென் மாகாண சபைகள் 2 அல்லது 3 வாரங்களில் கலைப்பு : சுசில் பிரேம ஜயந்த

மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபை இரண்டும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கலைக் கப்பட்டுவிடும். முடிந்தால் ஐ. தே. க. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி காட்டட்டும் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.சுற்றாடல் அமைச்சு உட்பட தெரிவுக் குழுவுக்கு ஆற்றுப் படுத்தப்பட்ட அமைச் சுக்களுக்கான நிதி ஒதுக் கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது அரசு ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. 2009 களில் இலங்கைக்கு 4,50,000 சுற்றுலா பயணிகளே வந்தனர். ஆனால் இத்தொகை இன்று ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஹோட்டல்கள் எதுவும் இருக்கவில்லை. இன்று 1000 அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப அறிவு 9 வீதமாக இருந்தது இன்று 25 வீதமாக அதிகரித்துள்ளது. 2016 இல் இதனை 75 வீதமாக அதிகரிப்பதே எமது இலக்கு.

பல்கலைக்கழகங்களுக்கு 12,000 மாணவர்களே உள்வாங்கப்பட்டனர். இப்போது 24,000 பேர் உள்வாங்கப்படுகின்றனர். எமது அரசை தோற்கடிக்கச் செய்ய ஐ. தே. க. தலைமைத்துவ சபையை உருவாக்குகிறது. இந்த தலைமைத்துவ சபையை உருவாக்கினும் எமது அரசை தோல்வியடையச் செய்ய முடியாது.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் மேல் மாகாண சபையையும், தென் மாகாண சபையையும் கலைப்போம். அப்போது தேர்தலில் போட்டியிட்டு முடிந்தால் ஐ. தே. க. எம்மை தோற்கடித்துக் காட்டட்டும் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply