சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ வேண்டுமா? :சுரேஷ் பிரேமச்சந்திரன்
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற தோரணையிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. சமாதானமும், நல்லிணக்கமும் என்று அரசாங்கம் தொடர்ந்தும் பேசிவந்தாலும் அது உதட்டளவிலேயே உள்ளது. மாறாக நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் மோதல்கள் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அங்குள்ள மக்கள் இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளேயே வாழ வேண்டியிருக்கிறது. இதனை சர்வதேசம் நன்றாக அறிந்து வைத்துள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். எமது மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான அதைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply