உக்ரேனில் அவசரகாலநிலை தோற்றலாம்
உக்ரேனில் அவசரகால நிலைமை அறிவிக்கப்படக் கூடிய நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய அளவிலான போராட்டம் இடம்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எதிர்ப்பாளர்கள் அந்த நாட்டு சட்டத்துறை அமைச்சகத்தின் கட்டிடம் ஒன்றை ஆக்கிரமித்துள்ளனர்.இது தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உக்ரேன் சட்டத்துறை அமைச்சரான ஒலேனா லுகாஷ், உரையாற்றியிருந்தார்.
எதிர்ப்பாளர்கள் உடனடியாக அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறாவிட்டால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
முகமூடி அணிந்த 50 பேர் சட்டத்துறை அமைச்சக கட்டிடத்தில் நுழைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்ப்பாளர்கள் விவசாய துறை அலுவலக கட்டிடம் மற்றும் மின்சார துறை அலுவலக கட்டிடங்களை கைப்பற்றியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply