ஈராக்கில் கார் குண்டுவெடிப்பினால் 8 பேர் பலி
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் நாட்டம் அதிகமுள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று வெடித்தது. எதிர்பாராத இக்குண்டு வெடிப்பால் 8 பேர் பலியாகி உள்ளனர்.இத்தாக்குதலை அல்கொய்தா தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று ஈராக் நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply