ஆப்கான் அதிபருக்கு பெண்குழந்தை பிறந்தது

தலைநகர் புதுடில்லி அருகே உள்ள கூர்கானில் ஆப்கான் அதிபர் ஹமீது ஹர்சாய்க்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் ஷகிதா மொகம்மது அப்தாலி கூறியதாவது: கூர்கானில் உள்ள போர்டிஸ் நினைவு ஆராய்ச்சி மருத்துவ மனையில் வாரம் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக அதிபர் ஹர்சாய் இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் வழியில் கூர்கானிற்கு வந்து குழந்தையை பார்த்தார்.குழந்தையுடன் 20 நிமிடங்கள் வரை செலவிட்டார் . தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply