எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைது தொடரும்: இலங்கை

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடரும் என இலங்கை கூறியுள்ளது. இதுகுறித்து “எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தியாளரிடம் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனாரத்ன வியாழக்கிழமை கூறுகையில், ஜனவரி 27-ஆம் தேதி இந்திய – இலங்கை மீனவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் விதமாக இந்திய மீனவர்கள் தொடர்ந்து சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்படித்து வருகின்றனர்.

இவ்வாறு ஒப்பந்தத்தை அவர்கள் மீறுவது நீடித்தால், இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையால் பயன் எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்தியா விரும்பினால் திட்டமிட்டப்படி வரும் 13-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அவர்கள் விரும்பவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. எல்லையைத் தாண்டி வரும் இந்திய மீனவர்களை நாங்கள் தொடர்ந்து கைது செய்வோம் என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply