மோடிக்கு விசா அமெரிக்கா புது தகவல்
குஜராத்தில் 2002ல் இனக்கலவரம் நடந்தது தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தருவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது நாடெங்கும் நிலவும் மோடி அலை காரணமாக அமெரிக்க அரசு சார்பில் பேசிய அமெரிக்க மாகாண துணைச் செயலர் நிஷா டெஸி பிஸ்வால் “உண்மையான ஜனநாயக நாடான இந்தியாவிலிருந்து வரும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்க அரசு வரவேற்கும். எனவே மோடி இந்தியாவின் உயரிய பதவியான பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரை அமெரிக்கா கண்டிப்பாக வரவேற்கும். அவரது விசா குறித்த கெடுபிடிகள் தளர்த்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இக்கருத்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்:-
“விசா குறித்த வரைமுறைகள் வழக்கமான முறையிலே நடைபெறும். நரேந்திர மோடி அவர்கள் விசா கேட்டு விண்ணப்பித்தால் அது குறித்து தக்கமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மோடிக்கு விசா வழங்குவது பற்றி எங்களது அரசு யூக அடிப்படையில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply