ஜனீவாவில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கை தொடர்பாகச் சில நாடுகளும், உள்ளூர் மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், சனல் 4 உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங் கள் சிலவும் முன்னெ டுத்து வந்த பொய்ப் பிரசாரங்கள் படுதோல் வியில் முடிவுற்றுள்ளன.  தம்மால் முன் வைக்கப்பட்ட சோடிக்கப்பட்ட ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுக்கள் மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச போர்க் குற்றச்சாட்டு விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடும் எனவும் இலங்கை மீது பொருளாதாரக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் எனவும் சில நாடுகளும், அரசியல் வாதிகளும் எதிர்பார்த் திருந்தனர்.

ஆனால் அவை அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளன.

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட நகல் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என ஒரு விடயமே கோரப்படவில்லை, சர்வதேச போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவுமே பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கவில்லை. மாறாக மீண்டும் உள்ளக விசாரணைக்கே மூன்றாவது தடைவை யாகவும் இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சர்வதேச விசாரணை என்பது பற்றி ஒரு வசனம் கூடப் பிரஸ்தாபிக்கப்பட்டி ருக்கவேயில்லை. இந்நிலையில் இதுபற்றி மிகத் தெளிவாக அறிந்திருந்தும் சில தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை கோரிக்கை, ஐ.நா. பேரவை உத்தரவு என்பதாகவே தமது தலைப்புச் செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன. அதேபோன்று உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ்க் கட்சிகள் சிலவும் இதே நிலைப்பாட்டில் பொய்யான அறிக்கைகளைத் தயாரித்து தமிழ் ஊடங்களுக்கு வழங்கி வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா மாநாட்டில் கலந்து இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்த அமெரிக்காவே ஜெனீவா உயர்மட்ட சந்திப்பில் இம்முறையும் சர்வதேச போக்குற்ற விசாரணை இல்லையென்பது தெளிவாக சொல்லப்பட்டிருந்ததாக உள்வீட்டு தகவல்களை மேற்கோள் காட்டி அவர் கருத்து வெளியிட்டார்.

இதனை விலக்கிக் கொள்ளும் அல்லது வாக்கெடுப்பின்றி சந்தர்ப்பம் வழங்கும் நிலைக்குத் தனது நிலைப்பாட்டை மாற்றியமைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜெனீவாவில் தமது பொய்ப் பிரசாரங்கள் தோல்வியைச் சந்தித்துள்ள உண்மையை உணர்ந்து கொண்ட தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி, தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகளும் இனியும் மக்களை ஏமாற்றக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டு தமது எதிர்கால அரசியலுக்குச் சாதகமான அறிக்கைகளை விட்டுள்ளனர். இதனால்தான் இவர்களின் எந்தவொரு அறிக்கையையும் முதற்பக்கத்தில் பிரசுரிக்கும் தமிழ் ஊடகங்கள், இவ்வறிக்கையை மட்டும் உள்ளே சிறிதாகப் பிரசுரித்துள்ளன. சில தமிழ் அரசியல்வாதிகளும், ஒருசில தமிழ் ஊடகங்களுமே சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை உத்தரவிடக் கோருவதாக இன்னமும் செய்திகளைப் பிரசுரித்து வருகின்றன. இதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply