நாடாளுமன்றத்தில் பெண்கள்: உலகப் பட்டியலில் இந்தியாவுக்கு 111வது இடம்

உலக அளவில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் பங்கு தொடர்பான 189 நாடுகள் அடங்கிய பட்டியலில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது. 60 சதவீதத்துடன் ருவாண்டா முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையே நீடித்தால் அடுத்த தலைமுறைக்குள் பெண்கள் மிக உயர்ந்த நிலையை நாடாளுமன்றத்தில் அடையலாம் என்று நாடாளுமன்ற யூனியன் மற்றும் நாடாளுமன்றத்துக்கான சர்வதேச அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, 545 உறுப்பினர்கள் கொண்ட இந்திய மக்களவையில் 62 பேர் பெண்கள். 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் 28 பேர் பெண்கள். இரு அவைகளிலும் 11.4 சதவீதம் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டில் உலக அளவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் சதவீதம் 1.5ஆக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் ஆண்கள், பெண்கள் பாகுபாடு நீங்கி சமத்துவம் நீடிக்கும்.

பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டுமானால் விரிவான தொகுப்புகளுடன் ஒதுக்கீடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.நா. பெண்கள் நிர்வாக இயக்குநர் பும்னாசல் எம்லம்போ கியூகா கூறுகையில், “”உலக அளவிலான அரசியலில் பெண்களின் வெற்றி என்பது சாதனையை முறியடிப்பதாக உள்ளது. பாகுபாடற்ற நிலையை உருவாக்க தொடர்ந்து ஐ.நா. பாடுபடும். பெண் உறுப்பினர்களின் சதவீதம் அதிகரித்து இருந்தாலும், இன்னும், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாட்டைக் களைய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இனப்பாகுபாடு, வன்முறை, கட்சிகளின் அமைப்பு, வறுமை, போதிய நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் உலக அளவில் பெண்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது” என்றார்.

ஆண்கள், பெண்கள் இனப்பாகுபாடு இல்லை என்று கருதப்படும் அமெரிக்கா 83வது இடத்திலும், கனடா 54வது இடத்திலும் உள்ளன. சீனாவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான வாய்ப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே 30க்கும் சற்று குறைவான சதவீதத்துடன் நேபாளம் முதல் இடத்தில் உள்ளது.

அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த பெண்களின் சதவீதம் தற்போது 22.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply