ஈராக்கில் குண்டுகள் நிரப்பட்ட காரை கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் : 32 பேர் பலி
ஈராக்கில் குண்டுகள் நிரப்பட்ட காரை கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 32 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த ஹில்லா நகரின் நுழைவுப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த தாக்குதலில் பலர் தங்கள் கார்களுக்குள்ளேயே எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. பாக்தாத்திலிருந்து 95 கி.மீ தூரத்திலுள்ள இந்நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஏராளமானோர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் 32 பேர் மரணமடைந்ததுடன் மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது போன்ற தாக்குதலால் கடந்த வருடம் இங்கு 8868 பேர் கொல்லப்பட்டனர். இந்த வருடத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 1400 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply