இலங்கை அரசிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கே அமெரிக்கா எத்தனிக்கிறது : தமரா குணநாயகம்
ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் இலங்கையில் பயங்கரவாத யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய சரியான தகவல்கள் அவசியம் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொண்டு வரும் போர்வையில் அமெரிக்கா இராணுவ ரீதியிலான சலுகையை இலங்கையிடம் இருந்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஜெனீவாவில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு இன்று ஆசியாவில் ஒரு வலுவான தளத்தை அமைத்துக் கொள்வதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், அந்நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பக்கபலமாக வைத்துக் கொண்டு சர்வதேச விசாரணையொன்றை மனித உரிமை மீறல்பற்றி நடத்தப் போகிறோம் என்ற அழுத்தங்களை முன்வைத்து இலங்கையில் தங்களது இராணுவ தளமொன்றை அமைப்பதற்கு முயற்சி செய்கிறதென்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.
அவசியமாயின் தென்சூடானை ஏற்படுத்தியது போன்று இலங்கையையும் பிரிவினைப் படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி செய்யலாம் என்றும் தெரிவித்தார். ஆங்கில வார இதழான சிலோன் டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தமரா குணநாயகம், சமாதானத்தை நிலைநாட்டுவோம் என்ற போர்வையில் தெற்காசியாவில் சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து ஒரு பலம்வாய்ந்த சக்தியாக மாற்றும் ஜனாதிபதி ஒபாமாவின் ஆசியா தொடர்பான 2012ம் ஆண்டின் கொள்கைக்கு அமைய இந்த இராணுவத்தளத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்காகவே அமெரிக்கா செயற்படுகிறதென்று தெரிவித்துள்ளார்.
மெரிக்காவுக்கு தமிழர்களின் மனித உரிமைகள் குறித்தோ, தமிழர்களின் சம அந்தஸ்து குறித்தோ எவ்வித அக்கறையும் இல்லை என்று தெரிவித்த தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக நேரடி தடைகளை விதிப்பதற்கு பதில் இதன் மூலம் அமெரிக்கா தனது எண்ணத்திற்கு தேவையான சலுகைகளை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கு எத்தனிக் கிறதென்று தெரிவித்தார்.
இலங்கையை தோல்வியடைந்த நாடாக உலகிற்கு காண்பிப்பதற்கு முயற்சி செய்யும் அமெரிக்கா, இலங்கையின் அரச நிறுவனங் களும் நீதித்துறையும் இன்று செய லற்று ஒரு தலைப்பட்சமாக செயற்படுகிறதென்றும் அமெரிக்கா வெளி உலகிற்கு காண்பிக்க எத்தனிக்கிறதென்றும் அமெரிக்கா தொடர்ச்சியாக மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டு கிறதென தமரா குணநாயகம் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஜெனீவா பிரேரணை வெற்றிபெற வேண்டும் அல்லது வெற்றி பெறாதிருக்க வேண்டுமென்பதில் அக்கறை இல்லாத போதிலும் அந்நாடு இலங்கையை சர்வதேச ரீதியில் தனிப்படுத்துவதையே விரும்புகிறதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply