போர்க்குற்ற விசாரணைக்கான ஆதரவில் மாற்றம் இல்லை : பிரித்தானியா

இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் பின்னர் இலங்கைப்படையினர் கொல்லப்பட்ட போராளிகள் மீது பாலியல் குற்றங்கள் புரிவதை வெளிக்காட்டும் காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்ட நிலையிலேயே கமரூனின் இந்த ஆதரவை வழங்கியுள்ளதாக அவரது அலுவலகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ரீதியாக விசாரணை செய்யவேண்டும் என்று கோரி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு பிரித்தானியாவும் தமது தீவிர ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே சனல் 4வின் இறுதிக் காணொளியின் பின்னர் கமரூனின் தனிப்பட்ட ஆதரவும் இந்த சர்வதேச விசாரணைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கான ஆதரவில் மாற்றம் இல்லை என பிரித்தானியா உறுதியாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply