ஆட்சியாளர்கள் மின்சார நாற்காலியல் அமர்த்தப்படுவார்கள் என்பது பொய் : சரத்பொன்சேகா
அனைத்து மதங்களும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயககக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களது உரிமைகள் உறுதி செய்யப்பட செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்ஷ அரசாங்கம் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றது.இன,மத அல்லது ஜாதி அடிப்படையிலான அரசியலை நாம் அடியோடு வெறுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்கு பொய்களையே கூறி வருகின்றது என ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில் எதனையும் சொல்ல முடியாத அரசாங்கம் தற்போது ஜெனீவா பிரச்சினையை தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆட்சியாளர்கள் மின்சார நாற்காலியல் அமர்த்தப்படுவார்கள் என மக்கள் மத்தியில் பொய்யான பீதியை கிளப்பி அதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply