அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற சீக்கியர்களை அனுமதிக்க வேண்டும்

அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்கள் தங்களது மத சம்பிரதாயப்படி தலைப்பாகை, தாடி வைத்திருக்க அனுமதிப்பதில்லை. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ராணுவ வீரராகும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இந்தியா, கனடா, இங்கிலாந்து ராணுவத்தில் சீக்கியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்க ராணுவத்திலும் அனுமதி வழங்க வேண்டும் என்று அங்குள்ள சீக்கியர்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்ததுடன் எம்.பி,க்களை சந்தித்து முறையிட்டார்கள்.

இதனை அடுத்து ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த 105 எம்.பி.க்கள் அமெரிக்க ராணுவ மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‘சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொண்டு ராணுவத்தில் பணியாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை சீக்கியர் கூட்டமைப்பின் சட்ட, கொள்கை பிரிவு இயக்குனர் ராஜ்தீப் சிங் வரவேற்று, ‘இது எங்கள் முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் சேர எங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply