அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால் ஐநாவில் முறையிட்டோம் – முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறுத்து ஐநா மனித உரிமை ஆணையகத்திற்கு முறையிட்டதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து முறையிட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இது விடயம் குறித்து நவநீதம் பிள்ளைக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சில அடிப்படைவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் ஐநாவிடம் கூறியுள்ளது.
தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கவில்லை என அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply