இலங்கைக்கு எதிராக விசாரணை கோரும் பிரேரணை அநாவசியமாக மூக்கை நுழைக்கும் செயல் : மஹிந்த சமரசிங்க
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்றைக் கொண்டுவரும் முயற்சியானது இலங்கை விடயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கும் தேவையற்ற செயல் என பெருந்தோட்டத்துறை அமைச்சரும், ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் அங்கம் வகிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இலங்கை அடைந்திருக்கும் இலக்குகள் குறித்தும் அமைச்சர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply