முஷாரஃப் உயிருக்கு அச்சுறுத்தல்: நீதிமன்றம் விசாரணை
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து, அவருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றம் அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளை புதன்கிழமை அழைத்து ரகசிய விசாரணை செய்தது. அதிபராக இருந்தபோது பல கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய முஷாரஃப், தற்போது எதிர்நோக்கியுள்ள வழக்குகளில் ஒன்றான தேசத்துரோக வழக்கின் விசாரணைக்கு செல்லும் வழியில் இருமுறை வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையையடுத்து, அவ்வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் ஆஜராகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply