வாயை மூடிக்கொண்டு அமைச்சுப் பதவியை காப்பாற்றிக்கொள்வதே ஹக்கீமுக்கு நல்லது : மேர்வின் சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நேர்ந்ததே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் நேரும் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு எதிராக துரோகம் இழைப்பவர்களுக்கு பிரபாகரனின் தலைவிதியே காத்திருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொருத்தமில்லாத உரைகளை ஆற்றி மக்களிடையே இன முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.வாயை மூடிக்கொண்டு அமைச்சுப் பதவியை காப்பாற்றிக்கொள்வதே ஹக்கீம் செய்ய வேண்டிய புத்திசாதூரியமான காரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்ததனைப் போன்று இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியும் என அமைச்சர் ஹக்கீம் அண்மையில் குறிப்பிட்டிருந்தாகவும், அவ்வாறான சாத்தியங்கள் எதுவும் கிடையாது எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவை என்ற போதிலும், ஜனாதிபதிக்கு 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் இனத்தவர்களையும் ஜனாதிபதி ஒரே விதமாக நடாத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எவரேனும் ஆதரவினை விலக்கிக் கொண்டால் அது அரசாங்கத்தை பாதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் பிரபாகரனுக்கு நேர்ந்த கதியே நேரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply