மலேசிய விமானத்தை தேடும் முயற்சியை கைவிடமாட்டோம்: சீன பிரதமர்

சீன பிரதமர்  லீ கெக்கியாங் இன்று 12வது சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குபதில் அளித்தார். அப்போது மலேசியன் ஏர்லைன் விமானம் காணாமல் போனது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். நாங்கள் எங்கள் தேடுதல் முயற்சியை  கைவிடமாட்ட்டோம்.. 8 கப்பல்கள் கடற்பகுதியில் தேடுதல் பணியில் உள்ளது. மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் 10 செயற்கைககோள் ஆதரவுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளீல் ஈடுபட்டுள்ளோம் என்று சீன மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.மேலும் நேற்று கப்பல் கேப்டனுடன் தொலைபேசியில் பேசியபோது தேடுதல் முயற்சி சிறந்த முறையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply