அரசு மக்களுக்காக சேவை செய்யும் போது சர்வதேசம் காலை வாரப்பார்க்கிறது : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுகையில் சர்வதேச நாடுகள் எம்மை மறைமுகமாக காலைவாரப் பார்க்கின்றன எனவும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக செயற்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். முப்பது வருடகாலம் நாட்டைச் சீரழித்த பங்கரவாதத்தை அழித்தொழித்தமைக்காக எம்மை யுத்தக் குற்றஞ்சாட்டி சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக் கையில் மேற்கத்தைய நாடுகள் ஈடுபட்டுள் ளன.
இத்தகைய சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பலப்படுத்தும் வகையில் எமது ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இத் தேர்தல் மூலம் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
காலி நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள், சதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-
காலி மாவட்டம் அமைச்சர்கள் ரிச்சர்ட் பத்திரண, அமரசிறி தொடங்கொட போன்ற தலைவர்கள் வாழ்ந்த தொகுதி. இப்போது சகவாழ்வு, ஜனநாயகம் என்று குரலெழுப்பும் எதிர்க்கட்சி அப்போது நாம் ஜனநாயக ரீதியில் எடுத்த முயற்சிகளையும் சீர்குலைத்தது.
அரசாங்கம் தென் மாகாணத்தில் மட்டுமன்றி அனைத்துப் பிரதேசங்களிலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்குக் கடனாளிகளல்ல. அந்தளவு மக்கள் சேவையை பெருமளவில் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகையில் மேற்கத்தைய நாடுகள் எமது காலை வாரிவிடப்பார்க்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக யுத்தக் குற்றச்சாட்டு எம் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் இதற்கெதிராகக் குரலெலுப்பும் காலமிது. எமது ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இத் தேர்தல் மூலம் வெளிக்காட்டுவது மக்களின் பொறுப்பு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் ரெஜினோல்ட் குரே:- யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்த சேர்ச்சில் அடுத்த தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் யுத்தத்துக்கு முன்பும் யுத்தத்துக்கு பின்பும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றிபெற்றார். எப்போதும் அவர் வெற்றி பெறுவார்.
தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு போன்ற இழுத்துச் செல்ல முடியாத அமைச்சுக்களைக் கடந்த காலங்களில் அவருக்கு வழங்கிய போதும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு முன்னோக்கி வெற்றியுடள் சென்ற அரசியல் தலைவர் அவர். எப்போதும் சவால்களை வெற்றி கொள்பவர் அவர்.
வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப் படும் சூழ்ச்சிகளை மக்கள் அறிவர். இதனைத் தோற்கடிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தமது பலத்தைக் காட்ட வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply