ரூ.30 ஆயிரம் கோடி தேர்தல் செலவின் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும் என எதிர்பார்ப்பு
நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்துடன் உள்ள நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரூ.30 ஆயிரம் கோடி செலவிட உள்ளது. இந்த தேர்தல் செலவு மூலம் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார சீரழிவு ஏற்பட்டபோது அதன் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற அளிக்கப்பட்ட 4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகைக்கு சமமாகும். தேர்தல் செலவு பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. வழக்கமாக தேர்தல் செலவின் மூலம் 0.2 லிருந்து 0.3 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதாக தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பிரணாப் சென் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை, அமெரிக்க தேர்தல் செலவுக்கு சமமாக இருக்கும். 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் செலவிடப்பட்டதை விட மூன்று மடங்கு அதிக தொகை வரும் பொதுத் தேர்தலில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply