உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா விரும்பவில்லை: ஐ.நா.தூதர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற மாஸ்கோவிற்கான ஐ.நா.தூதர் வைடலி சுர்கின், உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்யா விரும்பவில்லை என்று கூறினார். மேலும் இதுகுறித்து அவர் பேசியதாவது :- ரஷ்யா போரை விரும்பவில்லை. அதை ரஷ்யர்களுக்கு செய்வதையும் விரும்பவில்லை. கிரீமியா ரஷ்யாவுடன் சேர வேண்டுமா? என்பதை முடிவு செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைன் பிரதமர் அரசியலமைப்புக்கு முரணாக பதவியிலிருந்து இறக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்கு அது இல்லாமல் போயிருந்தால் உக்ரைனில் மக்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply