மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் : மலேசிய பிரதமர்

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் காணாமல் போனதில், விமானத்தை யாரையேனும் கடத்தியிருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாகவும், விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. கடற்பரப்புகளில் காணாமல் போன விமானத்தை, 42 கப்பல்கள், 39 விமானங்கள் தேடி வருகின்றன.

விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை நினைத்து கவலை அடைகிறோம். அவர்கள் மீது அதிக அக்கறை கொள்கிறோம் என்றார்.

விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply