ரஷ்யாவுடன் கிரிமியா இணையுமா? வாக்கெடுப்பு தொடங்கியது
பொருளாதார சீரமைப்பிற்காக ஐரோப்பிய யூனியனுடன் இணைவதாக இருந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் கடைசி நேரத்தில் ரஷ்யாவின் எதிர்ப்பால் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது. 
கடந்த நவம்பரில் ஏற்பட்ட இந்தப் போராட்டங்களின் விளைவாக அதிபர் தனது பதவியைத் துறக்க அதன்பின் அமைந்த இடைக்கால அரசு வரும் மே மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தல் குறித்த ஆலோசனைகளை தொடங்கியது.
இதனிடையில் உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தது. இந்தத் திட்டத்தினை அமெரிக்கா உட்பட உலக சக்தி நாடுகள் மறுத்து வரும்போதும் ரஷ்யா இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றது.
கிரிமியாவின் பெரும்பான்மை மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இன்று அதுகுறித்த வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ரஷ்ய சார்பு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ள
இந்த ஓட்டெடுப்பை உக்ரைன் நாட்டின் அரசியலமைப்பை மீறும் சட்டவிரோதமான செயல் என்று கூறி ஐரோப்பியத் தலைவர்களும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் நிராகரித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply