ஜி8 மாநாட்டில் இருந்து ரஷியா சஸ்பெண்ட்: பிரான்ஸ் அறிவிப்பு
உக்ரைன் விவகார எதிரொலியாக ரஷியாவின் சோச்சி நகரில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி8 மாநாட்டில் இருந்து ரஷியா தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த அமைப்பிலுள்ள 7 உறுப்பு நாடுகள் ஜி8 மாநாட்டில் பங்கேற்புக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளன.
இது குறித்து பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரென்ட் ஃபேபியஸ் செவ்வாய்க்கிழமை வானொலியில் பேசுகையில்,””ரஷியா அல்லாத 7 முன்னணி நாடுகளை ஒருங்கிணைப்போம். எனினும், ஜூன் 6ஆம் தேதி பிரான்சில் நடைபெறவுள்ள படை வீரர்கள் நினைவு தின நிகழ்ச்சிக்கு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply