ஐரோப்பா ரோமிங் கட்டணம் ரத்து மசோதாவிற்கு தொழிற்கமிட்டி ஒப்புதல்
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும் ரோமிங் கட்டண ரத்து மசோதா அதன் தொழிற்கமிட்டியின் ஒப்புதலை நேற்று பெற்றது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 நாடுகளிலும் வரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மொபைல் போன்களின் மூலம் அனுப்பப்படும் தகவல்களுக்கோ, அழைப்புகளுக்கோ அதிகப்படியான கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இணையதளப் பயன்பாடுகளுக்கும் இந்த விதிமுறைகள் இனி பொருந்தும். ஆயினும், இந்த சட்டத்தை செயல்படுத்தும் முன் ஐரோப்பிய பாராளுமன்றமும், கவுன்சிலும் இதற்கு தங்களின் ஒப்புதலை அளிக்கவேண்டும். வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி இந்த ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் முதல் இதற்கான குறைந்த கட்டண விகிதங்கள் அமலுக்கு வரும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதலே ஐரோப்பிய யூனியன் படிப்படியாக ரோமிங் கட்டணங்களைக் குறைத்து வருகின்றது. இதன்விளைவாக அங்கு இப்போது மொபைல் அழைப்புகள் மற்றும் தகவல்களுக்கான கட்டணங்கள் 80 சதவிகிதம் குறைந்தும், இணையதளப் பயன்பாடுகளுக்கான கட்டணங்கள் 91 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகின்றன.
இருப்பினும், 28 சதவிகித பயணிகள் இந்த அதிகப்படியான கட்டணத்திற்காகவே தங்களின் போன்களை உபயோகப்படுத்துவதில்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply