தலாய் லாமாவுக்கு இமாச்சல பிரதேச மாநில பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா(78), இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார். திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார். தாய்நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தொண்டினை பாராட்டி அமைதிக்காக வழங்கப்படும் உலகின் உயரிய நோபல் பரிசு தலாய் லாமாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு நாட்டுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ள இவருக்கு இமாச்சல் பிரதேச மாநில பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
தலைநகர் சிம்லாவில் நேற்றிரவு நடைபெற்ற இமாச்சல பிரதேசம் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் மாநில கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஊர்மிளா சிங் இந்த பட்டத்தை தலாய்லாமாவுக்கு வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply