அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 75 பேர் கைது
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 75 இந்திய மீனவர்கள் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து காரைநகர் கடற்படையினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் தெரிவித்தனர்.மேற்;படி மீனவர்கள் கடற்படையினரால் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக நீரியல் வளத்துறையினர் மேலும் தெரிவித்தனர். இதேவேளை,இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 5 விசை படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யபட்ட மீனவர்கள் ராமேஷ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். கைது செய்யபட்ட 25 மீனவர்கள் இலங்கை தலைமன்னர் கொண்டு செல்லபட்டனர் என்றும் அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply