ரி.என். ஏ. எவருக்கும் ஆதரவு இல்லை கட்சியின் பெயரை பாவிக்க வேண்டாம் இரா. சம்பந்தன் கண்டிப்பான உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கு ஆதரவு வழங்கு வதாக வெளியான பத்திரி கைச் செய்திகளை அதன் தலைவர் இரா. சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. அதனால் தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து பத்திரிகைகளுக்கு இத்தகைய அறிக்கைகளை விட வேண்டாமென சம்பந்தன் கண்டிப் பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது.

காழும்பு அரசியல் வேறு, வடக்கு கிழக்கு அரசியல் வேறு எனத் தெரிவித்திருக்கும் சம்பந்தன் தமது கட்சிக்கு கொழும்பில் அரசியல் செய்யும் நோக்கம் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள கூட்டுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எவராவது யாருக்காவது ஆதரவு தெரிவிக்க விரும்பினால் தத்தமது கட்சியின் பெயரையும் தமது பெயரையும் பாவித்துச் செயற்படுமாறும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளாராம்.

கடந்த வாரம் ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஆலயமொன்றில் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட புகைப்படங்கள் பத்தி ரிகைகளில் வெளிவந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சம்பந்தன், தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட முறையிலேயே அதில் கலந்துகொண்டதாகவும் கட்சி அவர்களை அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள் ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பொது வைபவமொன்றில் சந்தித்த சம்பந்தன், கொழும்பில் தமது கட்சி எவருக்கும் ஆதரவு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply