இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பூரண ஆதரவு : கமருன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பூரண ஆதரவை வழங்கும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்த வாரத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது. இந்த தீர்மானத்திற்கு முழு அளவில் ஆதரவளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவித்துள்ளன.இலங்கையில் பூரண நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறியுள்ளதாக கமருன் சுட்டிக் காட்டியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த கால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

எனவேபோர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோருகின்றோம் என பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply