அமெரிக்காவில் ராணுவ வீரர் சுட்டதில் சக வீரர்கள் 3 பேர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘‘போர்ட் குட்’’ பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இன்று அதிகாலை அந்த ராணுவ முகாமை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியால் மற்றவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்களோ என்று நினைத்தனர். அவர்கள் எதிர் தாக்குதல் நடத்தும் வகையில் வந்தனர். அப்போது அந்த ராணுவ வீரர் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பிறகும் அந்த ராணுவ வீரர் தொடர்ந்து மற்றவர்களை நோக்கி சுட்டார். இதில் 16 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து அந்த ராணுவ வீரரை மற்ற வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த ராணுவ வீரர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் உடலையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் கைப்பற்றி ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கடந்த 2011–ம் ஆண்டு சுமார் 4 மாதங்கள் ஈராக்கில் பணியாற்றினார். அப்போது அவரது மன நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பினார்கள். மனநலம் பெற அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் இப்படி வெறித்தனமாக நடந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply