அந்தமான் கரையோரப் பகுதியில் 26 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 26 இலங்கையர் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்தமான் கரையோரப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தமான் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இவர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதுசெய்துள்ளனர்.

வேலைதேடும் நோக்கிலேயே தாம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்ததாகவும், படகோட்டிக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்தே தாம் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். இவர்கள் எந்தவொரு ஆவணங்களும் இன்றி பயணித்ததாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply